ஏதென்ஸ் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – மரணங்களின் எண்ணிக்கை உயர்வு
ஏதென்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்த ஆறு பேரில், 70 வயதுகளில் உள்ள ஒரு பிரிட்டிஷ் நாட்டவரும் அவரது கிரேக்க மனைவியும் அடங்குவதாக நம்பப்படுகிறது.
மேலும் இந்த விபத்தில் அமெரிக்கர்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெரிய எரிவாயு கசிவின் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஏதென்ஸ் மேயர் ஹாரிஸ் டூகாஸ் Haris Doukas சந்தேகிக்கிறார்.
தீயணைப்புத் துறை புலனாய்வாளர்கள் தற்போது அந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.




