ஏதென்ஸில் மாணவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்
ஏதென்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் தலைக்கவசம் அணிந்திருந்த மர்மக் கும்பல் ஒன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக கிரேக்க அவசர மருத்துவ சேவை மற்றும் ஏதென்ஸ் செய்தி முகமை (Athens News Agency) தெரிவித்துள்ளன.
காயமடைந்த மூவருக்கும் ஏதென்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
அதேநேரம் தாக்குதலை நடத்தியவர்கள் யார் அல்லது எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவரவில்லை என்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.




