ஐரோப்பா

ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் பதவி விலகுவதாக அறிவிப்பு

ஸ்வீடன் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் Ulf Kristersson  தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

349 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நான்கு எதிர்க்கட்சிகளும் 176 இடங்களை வென்றன.

அதே நேரத்தில் பதவி விலகும் பழமைவாத தலைமையிலான கூட்டணியும் அதன் ஆதரவாளர்களும் 173 இடங்களைப் பெற்றனர்.

முன்னாள் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சனின் Magdalena Andersson’s  மிதவாத-இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி 99 இடங்களுடன் வெற்றிவாகை சூடியுள்ளது.

இருப்பினும் எதிர்க்கட்சி அணிக்குள் உள்ள சித்தாந்தப் பிளவுகள் காரணமாக, ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்பதில் மாக்டலினா ஆண்டர்சன் சவாலை எதிர்கொண்டுள்ளார்.

இதேவேளை குடியேற்ற எதிர்ப்பு ஸ்வீடன் ஜனநாயகக் கட்சி 11 இடங்களை இழந்ததால் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, மொத்தமாக 62 இடங்களைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்