உக்ரைனின் தொடர் தாக்குதல் – ரஷ்யாவின் முக்கிய தளபதி உயிரிழப்பு
டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரேனிய ஆளில்லா விமானப் படைகள் நடத்திய இரவு நேரத் தாக்குதலில், ரஷ்ய மேஜர் ஜெனரல் அன்டன் க்ரூனிஸ் Anton Grunis உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோஸ்டியாண்டினிவ்காவைக் Kostiantynivka கைப்பற்றியதாகக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய கூற்றுகளைத் தொடர்ந்து, க்ரூனிஸ் சமீபத்தில் விளாடிமிர் புட்டினிடமிருந்து ‘ரஷ்யாவின் வீரன்’ என்ற பதக்கத்தை பெற்றிருந்தார்.
அவரது மரணத்தை உக்ரேனிய ஆளில்லா விமானத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி Robert Brovdi அறிவித்ததை ரஷ்யத் தளபதி ஆப்டி அலாவுடினோவ் Apti Alaudinov உறுதிப்படுத்தினார்.
இதேவேளை கீவ் மற்றும் ஒடெசா மீது ரஷ்யா நடத்திய தனித்தனி இரவு நேரத் தாக்குதல்களில், ஒடெசா அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்த ஒரு குழந்தை உட்பட குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.




