அதிவேக சதமடித்து அபிஷேக் சர்மா சாதனை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரின் மூன்றாவது போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தை பதிவு செய்துள்ளார் அபிஷேக் சர்மா.
இந்தப் போட்டியில், இந்திய அணிக்காக அதிவேக T20 சதத்தையும், சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக மூன்றாவது அதிவேக சதத்தையும் அவர் பதிவு செய்தார். இன்னிங்ஸின் 9வது ஓவரிலேயே வெறும் 30 பந்துகளில் அவர் இந்தச் சதத்தை எட்டினார்.
அவர் தனது முதல் 50 ரன்களை வெறும் 16 பந்துகளில் எட்டினார். இது இந்திய அளவில் நான்காவது அதிவேக அரைசதமாகும்.
2026 ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம், இந்திய அளவில் இரண்டாவது அதிவேக அரைசத சாதனையை அபிஷேக் சர்மா ஏற்கனவே தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டம், இந்திய இன்னிங்ஸின் பாதி நிறைவடைவதற்கு ஒரு பந்து மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், ரஷீத் கான் பந்துவீச்சில் 108 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. 11 சிக்ஸர்களையும், 09 பவுண்டரிகளையும் அவர் விளாசி இருந்தார்.
மறுமுனையில், இரண்டாவது T20 போட்டியைப் போலவே தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் கவனமாக விளையாடினார். எனினும், பின்னர் அவரும் களத்தில் இறங்கி அடித்து ஆடி இந்தியாவின் ரன் குவிக்கும் வேகத்தை உயர்த்தினார்.
இவ்விருவரின் சிறப்பான கூட்டணியால், பவர் பிளே (Powerplay) ஓவர்களில் இந்தியா 100 ரன்களைக் குவித்து அணியின் புதிய சாதனையைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களைப் பெற்றது.




