ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் பதவி விலகுவதாக அறிவிப்பு
ஸ்வீடன் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் Ulf Kristersson தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். 349 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நான்கு எதிர்க்கட்சிகளும் 176 இடங்களை வென்றன. அதே நேரத்தில் பதவி விலகும் பழமைவாத தலைமையிலான கூட்டணியும் அதன் ஆதரவாளர்களும் 173 இடங்களைப் பெற்றனர். முன்னாள் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சனின் Magdalena Andersson’s மிதவாத-இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி 99 இடங்களுடன் வெற்றிவாகை சூடியுள்ளது. இருப்பினும் […]



