உலகம்

நியூயார்கில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கத்திகுத்து தாக்குதல்!!

நியூயார்க் நகரத்தின் பரபரப்பான பென் ஸ்டேஷனுக்குள் ( Penn Station) நேற்று கத்திகுத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் 06 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர்  ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் நடந்த சிலமணி நேரங்களிலேயே தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறவிருந்த NBA இறுதிப் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தை காண ஜனாதிபதி ட்ரம்ப் வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக  அப்பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பலத்த பாதுகாப்பிற்கு நடுவே இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்