மெக்சிகோவில் தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு உத்தரவு
சமூக வலைத்தளங்களில் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களை நீக்குமாறு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலைகளில் தொடர்ச்சியாக நடந்த கொடூரமான தாக்குதல்களைத் தொடர்ந்து, அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதற்காக மெட்டா, டிக்டாக், எக்ஸ், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு ஒரு மாதக் கால அவகாசம் வழங்கியுளளார்.
கடந்த இரண்டு வாரங்களில், இரண்டு வெவ்வேறு பாடசாலைகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது இருவர் உயிரழந்துள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்கள், “சமூக ஊடகங்களில் தகவல் தொடர்புடன் தொடர்புடைய நடத்தையுடன் தொடர்புடையது என ஷெயின்பாம் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




