செய்தி விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி T-20 தொடரை சமநிலைப்படுத்தியது மே.தீவுகள்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 4 ஆவது T-20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 4 ஆவது T-20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் சதம் அடித்து அசத்தினார்.

9 சிக்ஸர்கள், 4 பவுணடரிகள் அடங்கலாக 50 பந்துகளுக்கு 102 ஓட்டங்களைப் பெற்று கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

முன்னதாக, நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

தற்போது இரண்டு அணிகளும் 5 T-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. முதல் மூன்று ஆட்டங்களில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது.

இந்நிலையில், நான்காவது T- 20 ஆட்டம் நேற்று (அக்.14) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைப் பெற்றது.

248 என்ற வெற்றி இலக்கை விரட்டிய இந்தியா 19.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் கீமோ பால், 5 விக்கெட்டுகளை இந்த ஆட்டத்தில் கைப்பற்றினார்.

24 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடர் இப்போது 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

ஏதிர்வரும் 17 ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறும் 5-வது டி20 ஆட்டத்தில் வெற்றி பெறுகின்ற அணி இந்த தொடரை கைப்பற்றும்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி