பிரிக்ஸ் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் ஆனந்த விஜேபால பங்கேற்பு
டெல்லியில் நேற்று நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கலந்து கொண்டுள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில், நடந்த இந்தக் கூட்டத்தில், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
வளர்ந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும், பாதுகாப்பான, உறுதியான மற்றும் மீள்திறன் கொண்ட வங்காள விரிகுடா பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தக் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின.
பிராந்தியப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது.
இந்தத் தொடக்கக் கூட்டத்தை நடத்தியதற்கும், பொதுவான பாதுகாப்பு நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல பிராந்தியப் பங்காளர்களை ஒன்றிணைத்ததற்கும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு அமைச்சர் விஜேபால பாராட்டு தெரிவித்தார்.




