ரியாத் மீதுான தாக்குதலுக்கு முன்பாகவே எச்சரிக்கைகளை நிறுத்திய சவுதி அரேபியா – காரணம் என்ன?
ரியாத் சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு 04 நாட்களுக்கு முன்னதாகவே சவுதி அரசாங்கம் தாக்குதல் பற்றிய எச்சரிக்கைகளை வெளியிடுவதை நிறுத்தியதாக மேற்கத்தேய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையானது நாட்டில் பாதுகாப்பான ஒரு சூழல் காணப்படுவதுபோன்று மேற்கத்தேய நாடுகளையும், நம்பவைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட மேற்கத்தேய அரசியல் ஆய்வாளர் ஒருவர், “அவர்கள் (சவுதி அரசாங்கம்) இரண்டு பக்கமும் ஆதாயம் அடைய விரும்புகிறார்கள்.
ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதுடன், அதே நேரத்தில் மக்களுக்கும் வெளிநாட்டுத் தரப்பினருக்கும் நம்பிக்கையை அளிக்க முயற்சிக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.




