உலகம்

சவுதியின் ஜசான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து

  • August 9, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் உள்ள அராம்கோவின் ஜசான் சுத்திகரிப்பு ஆலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சவூதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அராம்கோவின் தொழில்துறை பாதுகாப்பு குழுக்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சம்பவத்தைக் கையாள்வதற்கான நடைமுறைகளை முடித்து வருவதாகவும் எரிசக்தி அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை அது குறிப்பிடவில்லை. ஜசான் சுத்திகரிப்பு ஆலை ஒரு நாளைக்கு 400,000 பீப்பாய்கள் […]

உலகம் செய்தி

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்

  • August 7, 2026
  • 0 Comments

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இன்று ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன. இந்நிகழ்வு சவுதி அரேபியாவின் தலைநகர் ஜெட்டாவில் இடம்பெறவுள்ளது. போர்கள், மோதல்கள் மற்றும் இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஒப்பந்தம் ஒன்றை எட்ட  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் ” நீண்ட காலமாக விவாதத்தில் […]

உலகம்

ஈரானின் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதல் – அமெரிக்காவுக்கு கைக்கொடுத்த சவுதி அரேபியா

  • July 29, 2026
  • 0 Comments

ஈராக்கில் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு எதிராக சவுதி அரேபியாவுடன் இணைந்து அமெரிக்கா இன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகள் மீது ஈரான் பால்ஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி மீதான மோதலைத் தீர்க்கும் நோக்கில் ஓமான் ஒரு புதிய பிராந்திய ஒப்பந்தத்தை முன்மொழிந்த வேளையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

உலகம்

சவுதி மீதான தாக்குதல் எதிரொலி – பாப் எல்-மண்டேப் வழியான கப்பல் போக்குவரத்து சரிவு

  • July 27, 2026
  • 0 Comments

செங்கடல் கடற்கரையோரம் உள்ள சவூதி எண்ணெய் ஆலைகள் மீது யேமன் ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாப் எல்-மண்டேப் ( Bab el-Mandeb) வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து குறைவடைந்துள்ளதாக  கெப்ளர் நிறுவனத்தின் கப்பல் போக்குவரத்துத் தரவுகள் தெரிவித்துள்ளன. வார இறுதியில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து குறைவாகவே இருந்தது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அப்பகுதியூடாக 11 சரக்கு கப்பல்கள் மாத்திரமே சென்றதாகவும், இது பல மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த […]

உலகம்

யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல்

  • July 25, 2026
  • 0 Comments

யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது சவூதி அரேபியா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் ஆதரவு ஹூதி இயக்கம் சவூதி நகரமான ஜிசான் மீதான ஏவுகணைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. யேமன் ஏவுகணைத் தாக்குதல்” காரணமாக சவூதி நகரமான ஜிசானில் தீ விபத்து ஏற்பட்டதாக ஹூதி அமைப்பினரின் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கடந்த இரண்டு வாரங்களில் முதன்முறையாக, பரந்த பிராந்தியத்தில் அமெரிக்கா அல்லது ஈரான் நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதல்கள் குறித்த […]

உலகம்

சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக ஹுதிகள் அறிவிப்பு

  • July 20, 2026
  • 0 Comments

சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக ஹுதிகள் இன்று அறிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையானது வளைகுடா நாடுகளுக்கு அப்பால் எரிசக்தி விநியோகத்தை தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தொடர்ந்து தாக்கினால், செங்கடலுக்கான பாப் அல்-மண்டேப் (Bab el-Mandeb ) நுழைவாயிலை மூடுமாறு ஈரான் ஹூதிகளை வலியுறுத்தியிருந்தது. இதற்கமைய ஹூதிகளின் ஆயுதப் படைகள், ‘கண்ணுக்குக் கண்’ என்ற சமன்பாட்டின் அடிப்படையில், குற்றவாளியான சவூதி எதிராக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒரு […]