உலகம்

தைவானின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அமெரிக்க நலன்களுக்கு உகந்தது – தைவான் அமைச்சர்

தைவானின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் உலகிற்கு குறைக்கடத்திகளை (semiconductors) வழங்கவும் அந்நாட்டிற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவது அமெரிக்காவின் தேசிய நலனுக்கு உகந்தது என்று தைவானின் மூத்த தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பிற்கு பின் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட சீன ஜனாதிபதி தைவான் சுதந்திரத்தை எதிர்ப்பது என்ற “சரியான நிலைப்பாட்டை” அமெரிக்கா கடைப்பிடிக்கும் என்று நம்புவதாக, கூறினார்.

இது தொடர்பில் தைபேயில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துணை அமைச்சர் ஃபிரான்சுவா வூ Francois Wu ​, தைவான் விஷயத்தில் சலுகைகள் வழங்குவது உண்மையில் அமெரிக்க நலன்களுக்கு உதவுமா என்று கேள்வி எழுப்பினார்.

தைவான் சீன ஆட்சியின் கீழ் வாழ வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தன்னைத் தற்காத்துக் கொள்ள போதுமான திறனை வழங்குவது, மற்றும் ‘தைவானின் குறைக்கடத்தித் தொழில் தொடர்ந்து உலகிற்குப் பங்களிக்க அனுமதிப்பது’ ஆகியவை அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானவை என்றார்.

 

 

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்