கொரிய எல்லையில் பதற்றம் – தென்கொரியாவை ஊடுருவும் வடகொரியா
வட மற்றம் தென்கொரியாவை பிரிக்கும் இராணுவ எல்லைக் கோட்டைத் தாண்டி வட கொரியப் படைகள் ஊடுருவுவது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்காணித்து வருவதாக தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பதிலடி கொடுக்க தேவையான , உறுதியான இராணுவத் தயார்நிலையில் இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வட கொரியப் படைகள் இராணுவ எல்லைக் கோட்டை 20 முறைகளுக்கும் மேலாக கடந்து சென்றுள்ளதாக ‘சோசுன் இல்போ’ (Chosun Ilbo) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்கு இராணுவம் இன்று பதிலளித்துள்ள […]












