உலகம்

வொஷிங்டனில் பாரிய காட்டுத்தீ – 700 கட்டிடங்கள் தீக்கிரை

  • August 4, 2026
  • 0 Comments

வொஷிங்டனின் ஸ்போகேன் நகரின் புறநகர்ப் பகுதிகளில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதன்காரணமாக குறைந்தது  700 கட்டிடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் மூன்று பாரிய  காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஐடஹோ  (Idaho) எல்லைக்கு அருகிலுள்ள ராக்கி மலை அடிவாரத்திற்கு  மேற்கே பரவ ஆரம்பித்த காட்டுத்தீ  பின்னர் புறநகரங்களுக்கும் பரவி பாரிய தீவிபத்தாக உருவெடுத்துள்ளது. தீவிபத்தினால் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை எனத் […]

உலகம்

வொஷிங்டனில் அவசரநிலை அறிவிப்பு

  • August 2, 2026
  • 0 Comments

வொஷிங்டனில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 4000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்போகேன் (Spokane) பகுதியில் பரவலான வெளியேற்றங்களும் மின்சாரத் தடைகளும் ஏற்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்புப் பணிகளில் சுமார் 4,000 பேர் ஈடுபட்டுள்ளதாக, மாநிலத்தின் பொது நிலங்களுக்கான ஆணையர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆளுனர் ர் பாப் பெர்குசன் (Bob Ferguson) மாநிலம் தழுவிய அவசரநிலையையும், தீயணைப்புத் தடையையும் அறிவித்தார். மேலும் குறித்த தீ விபத்தில் ஏற்பட்ட சேத […]

உலகம்

வொஷிங்டனின் உயர்நிலை பாடசாலையில் கத்திகுத்து தாக்குதல்!

  • May 1, 2026
  • 0 Comments

வொஷிங்டனின் டகோமாவில் (Tacoma) உள்ள ஃபாஸ் ( Foss) உயர்நிலைப் பாடசாலையில் நேற்று கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த  சம்பவத்தில் நான்கு மாணவர்கள், ஒரு வயதுவந்த பாதுகாவலர் மற்றும் சந்தேக நபர் உட்பட 06 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியும் மேற்படி சம்பவத்தில் காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்றைய தினம் பாடசாலை […]

ஐரோப்பா

337 மதிப்புமிக்க தொல்பொருட்கள் இத்தாலியிடம் ஒப்படைப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

இத்தாலியிடமிருந்து கைப்பற்றப்பட்ட 337 மதிப்புமிக்க தொல்பொருட்களை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. இந்நடவடிக்கையானது ரோம் மற்றும் வொஷிங்டனுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. பண்டைய ரோமானிய சிற்பங்கள் முதல் கிரேக்க, எத்ருஸ்கன் மற்றும் எகிப்திய கலைப்பொருட்கள் வரையிலான இந்தத் தொல்பொருட்களின் தொகுப்பு, இத்தாலியின் கராபினேரி கலாச்சாரப் பாதுகாப்புப் பிரிவின் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. நியூயார்க் நகரை மையமாகக் கொண்ட நீண்ட தொடர் விசாரணைகளின் விளைவாக இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. […]

உலகம்

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இராப்போசன விருந்து இரத்து!

  • April 26, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவானதை தொடர்ந்து இரவு நேர விருந்து நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது. இரகசிய சேவை அதிகாரி மீது மேற்படி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதுடன், தற்போது அந்த அதிகாரி நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறைக் குற்றத்தின் போது துப்பாக்கியைப் பயன்படுத்தியது மற்றும் ஒரு கூட்டாட்சி அதிகாரியைத் தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. தாக்குதலுக்கான […]