Consent Preferences
அரசியல் இலங்கை செய்தி

மகாசங்கத்தினர் தலைமையிலேயே அடுத்த புரட்சி: விமல் எச்சரிக்கை

“பௌத்த சாசனத்திற்கு மதிப்பளிக்காமல் நாட்டை நிர்வகிக்க முற்பட்டால், 1956ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்று மகாசங்கத்தினர் தலைமையிலேயே இலங்கையில் அடுத்த புரட்சி ஏற்படக்கூடும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

“பௌத்த சாசனத்திற்கு மதிப்பளிக்காமல் நாட்டை நிர்வகிக்க முற்பட்டால், 1956ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்று மகாசங்கத்தினர் தலைமையிலேயே இலங்கையில் அடுத்த புரட்சி ஏற்படக்கூடும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவையாவன:

“தற்போதைய சூழ்நிலையை அவதானித்தால், இச்சமூகத்தில் 56ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்றதொரு புரட்சியே அடுத்து ஏற்படக்கூடும் எனக் கருதுகின்றேன்.

இந்நாட்டில் பௌத்த சாசனத்தை வீழ்த்தி, பௌத்த சாசனம் குறித்து அவதானம் செலுத்தாமல் நாட்டை நிர்வகிக்க முற்பட்டால் அதற்கு எதிராக மகாசங்கத்தினர் கிளர்ந்தெழுவார்கள்.

குறிப்பாக, மக்களின் மனங்களில் தேங்கியிருந்த வேதனைகளே ஞானசார தேரர் விவகாரத்தின் ஊடாக தற்போது வெளிப்படுகின்றது. சமூக வலைத்தளங்களில் பிக்குகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது நாட்டில் பௌத்த சாசனத்திற்கு எதிராக இதற்கு முன்னர் இவ்வாறு நடந்ததில்லை.

சிங்கள மொழியும், பௌத்த தர்மமும், சிங்கள மக்களும் ஒன்றிணைந்த நிலையிலேயே இருந்தனர். இதனை ஒருபோதும் உடைக்க முடியவில்லை.

எனவே, பௌத்த சாசனத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் போது, எவரும் எதிர்பாராத விதத்திலேயே அது தொடர்பான வேதனை வெளியாகும். மீண்டும் மகாசங்கத்தினர் தலைமையில் 56இல் ஏற்பட்டது போன்றதொரு புரட்சியே ஏற்படக்கூடும். அப்போது எவரும் இலகுவில் அதிகாரத்தைப் பெற முடியாது; ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலைப் பொறுப்பேற்றே செயற்பட வேண்டி ஏற்படும்” – என்றார் விமல் வீரவன்ச.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை