இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு
இந்தோனேசியாவின் வடகிழக்கு ஜாவா பிராந்தியத்தில் உள்ள டெலுக்நாகா (Teluknaga) அருகே நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 6.6 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் 359 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கிழக்கு இந்தோனேசியாவில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு குறைந்தது 100 பேர் உயிரிழந்தும், பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. […]






