கடத்தல் குறியீட்டை அனுப்பிய விமானம் – ஜெர்மனியில் பரபரப்பு
ஜேர்மனியில் விமானம் ஒன்று கடத்தல் எச்சரிக்கை விடுத்த நிலையில் போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கிரீஸிலிருந்து ஜெர்மனிக்குச் சென்ற போயிங் (BA.N) 737-800 ரக விமானத்தின் காக்பிட்டில் இருந்து ‘7500’ (விமானக் கடத்தல் வழக்கு) என்ற குறியீடு அனுப்பப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெர்மனியின் விமானப்படை இரு போர் விமானங்களை அவசரமாக அனுப்பியுள்ளது.
பின்னர் குறித்த விமானம் நியூரம்பெர்க்கில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் விமான நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், வானொலித் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“எந்தவொரு அவசர நிலையும் ஏற்படவில்லை என்றும், எந்த நேரத்திலும் பயணிகளுக்கோ, விமானப் பணியாளர்களுக்கோ அல்லது விமானத்திற்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை” என்றும் விமான நிறுவனம் மேலும் தெரிவித்தது.




