போலந்தில் சில்லறை விற்பனைநிலையங்களில் திடீர் சோதனை – போலி கத்திகள் அகற்றம்
போலந்தில் ஹலோவீன் கொண்டாட்டங்களில் போலி கத்திகள் போன்ற பொருட்களை பொலிஸார் அகற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வார்சா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த கத்திகுத்து சம்பவங்களை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சுமார் 3,900 கடைகளைக் கொண்ட போலந்தின் மிகப்பெரிய சில்லறை விற்பனைச் சங்கிலியான ஜெரோனிமோ மார்டின்ஸ் (JMT.LS) மற்றும் பீட்ரோன்கா Biedronka உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனைகளை நடத்தி அங்கிருந்த போலி கத்திகள், மற்றும் பயங்கரமான பொருட்களை அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
“குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன் மீதான அக்கறையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து சிறுவர் பொருட்களுக்கான சில்லறை விற்பனையாளரான ஸ்மிக் நிறுவனம், தனது கடைகள் அனைத்திலும், பிளாஸ்டிக் கத்திகள் மற்றும் வெட்டுக்கத்திகள் போன்ற அபாயகரமான கருவிகளைப் போல சித்தரிக்கப்பட்ட உருவங்களைக் கொண்ட துணைப் பொருட்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.




