பல்கேரியாவில் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் – 11 மாலுமிகள் மாயம்
பல்கேரியக் கடற்கரைக்கு அப்பால் இன்று ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகி கப்பல் ஒன்று நீரிழ் மூழ்கியுள்ளது.
இதில் குறித்த கப்பலில் பணியாற்றிய 11 மாலுமிகள் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கடற்பகுதியில் இடம்பெறும் இரண்டாவது சம்பவம் இது எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பல்கேரிய அரசாங்கம் ரஷ்ய தூதரை வரவழைத்து விளக்கம் கோரியுள்ளது.
இத்தாக்குதல்களை ரஷ்யாதான் நடத்தியது என்று பல்கேரியா நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை என்றாலும், இதன் விளைவு “ரஷ்யக் கூட்டமைப்பிற்குச் சாதகமாக உள்ளது” என்று பிரதமர் ரூமென் ராதேவ் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்யா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.




