உலகம்

மெக்சிகோவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்  கார் குண்டு வெடிப்பு

  • August 31, 2026
  • 0 Comments

மெக்சிகோவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்  கார் குண்டு வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய வழித்தடங்களைக் கொண்ட மாநிலமான சகாடெகாஸில் Zacatecas  உள்ள ஓஜோகாலியென்டே Ojocaliente  நகரில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனியார் வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தே வெடிகுண்டு இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை ஜகாடெகாஸ் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு முக்கியமான  வழித்தடம் ஆகும். இது மத்திய மெக்சிகோவை நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் […]

உலகம்

தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க பெரு, மெக்சிகோ இணக்கம்

  • August 7, 2026
  • 0 Comments

பெருவும் மெக்சிகோவும் தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இருநாடுகளும் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லிமாவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் பிரதமர் பெட்ஸி சாவேஸ் (Betssy Chavez), மெக்சிகோவிற்குப் பயணம் செய்ய லிமா அரசாங்கம் பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சாவேஸுக்கு மெக்சிகோ அரசாங்கம் தஞ்சம் வழங்கியதைத் தொடர்ந்து, பெருவுடனான தூதரக உறவுகள் சீர்குலைந்திருந்த நிலையில், தற்போது உறவுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

உலகம் முக்கிய செய்திகள்

மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு – சுனாமி எச்சரிக்கை அமுலில்

  • July 17, 2026
  • 0 Comments

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபாஸின் (Chiapas) கடற்கரைக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 7.4 ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகியுள்ளதுடன்,  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் புவேர்ட்டோ மடேரோ ( ​Puerto Madero)  நகருக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிமீ (6 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிமீ (186 மைல்கள்) தொலைவிற்குள் […]

ஐரோப்பா

மெக்சிகோவில் முகாமிட்டுள்ள இங்கிலாந்து அணிக்கு பலத்த பாதுகாப்பு

  • July 5, 2026
  • 0 Comments

மெக்சிகோவில் நடைபெறும் கால்பந்து போட்டிக்காக  அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து அணிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலை 100-க்கும் மேற்பட்ட குண்டு துளைக்காத கவச உடை அணிந்த கலவரத் தடுப்பு பாதுகாத்து வருகின்றனர். மெக்சிகோ ஆதரவாளர்கள் ஈக்வடார் வீரர்களுக்கு இடையூறு செய்தமையால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹோட்டலை சுற்றி பாதுகாப்பு வேலி  அமைக்கப்பட்டுள்ளதாகவும், காவல் நாய் மற்றும் ட்ரோன்களும் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே புயல் வர வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்புகள் காரணமாக ஆட்டத்தை முன்கூட்டியே […]

உலகம்

மெக்சிகோவில் பாரிய பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

மெக்சிகோவில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 41 பேர் இருந்தனர். அவர்களில் ஆறு பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,  மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. விபத்தில் சிக்கிய பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து, நயாரிட்டில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்ததாக  முதற்கட்ட விசாரணையில் […]