உலகம்

தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க பெரு, மெக்சிகோ இணக்கம்

  • August 7, 2026
  • 0 Comments

பெருவும் மெக்சிகோவும் தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இருநாடுகளும் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லிமாவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் பிரதமர் பெட்ஸி சாவேஸ் (Betssy Chavez), மெக்சிகோவிற்குப் பயணம் செய்ய லிமா அரசாங்கம் பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சாவேஸுக்கு மெக்சிகோ அரசாங்கம் தஞ்சம் வழங்கியதைத் தொடர்ந்து, பெருவுடனான தூதரக உறவுகள் சீர்குலைந்திருந்த நிலையில், தற்போது உறவுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

உலகம்

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து – 13 பேர் பலி

  • August 2, 2026
  • 0 Comments

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று நேற்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செஸ்னா கேரவன் சி-208 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம் நாஸ்கா லைன்ஸ் தொல்பொருள் தளத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. அதில் 11 பயணிகளும் 02 பணியாளர்களும் இருந்த நிலையில் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளில் இரண்டு ஜெர்மனியர்கள், இரண்டு ஸ்பானியர்கள் மற்றும் ஏழு இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக பெருவின் […]

உலகம்

பெரு நிலநடுக்கம் : உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • July 20, 2026
  • 0 Comments

பெருவின் மலைப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெருவின் ஜூனினில் (Junín) உள்ள சூபாக்கா (Chupaca) நகருக்கு அருகில், 24 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறித்த நிலநடுக்கம் பதிவாகி 17 நிமிடங்கள் கழித்து 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியாளர்கள் அவசர சேவைகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – 10 பேர் காயம்

  • July 19, 2026
  • 0 Comments

பெருவில் இன்று  5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ஆண்டியன் பகுதியான ஜூனினில் (Junín) உள்ள சூபாக்கா (Chupaca) நகருக்கு அருகில், 24 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறித்த நிலநடுக்கம் பதிவாகி 17 நிமிடங்கள் கழித்து 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியாளர்கள் அவசர சேவைகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

பெருவில் (Peru) அவசரகாலநிலை பிரகடனம் : தலைநகரில் ரோந்து செல்லும் இராணுவம்!

  • October 23, 2025
  • 0 Comments

பெருவில் (Peru) ஜனாதிபதி ஜோஸ் ஜெரி (José Jerí) பிறப்பதித்த அவசரகாலநிலை உத்தரவை தொடர்ந்து தலைநகரில் இராணுவத்தினர் ரோந்து சென்றதாக ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஜோஸ் ஜெரியின் (José Jerí) உத்தரவு அரசியலமைப்பு உரிமைகளை இடைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒன்றுக்கூடுதல், எதிர்ப்பு தெரிவிக்கும் சுதந்திரம், உள்ளிட்டவற்றை பாதித்துள்ளது.  மோட்டார் சைக்கிளில் பயணிப்பது, கைதிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்துவது உள்பட பல விடயங்களை பாதித்துள்ளது. மேலும் சிறை அறைகளுக்கான மின் வெட்டுக்களை துண்டிப்பது உள்ளிட்ட பல […]