சூடானில் துணை இராணுவப் படை நடத்திய தாக்குதல் – 41 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவை ஒட்டியுள்ள சூடானின் நீல நைல் பகுதியில், அந்நாட்டின் துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) ஆளில்லா விமானப்படை தாக்குதல் ஒன்றை முன்னெடுத்தது.
இதில் 41 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சூடானிய மனித உரிமை அமைப்பான எமர்ஜென்சி லாயர்ஸ் Emergency Lawyers வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தத் தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அபு ஷாண்டியில் இடம்பெயர்ந்தோருக்கான முகாமுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும்தான் என்று ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.




