டெல்லியில் முகாமிடுமாறு காங்கிரஸ் எம்.பிகளுக்கு பணிப்பு
வாக்கு திருட்டு ‘vote chori’ விவகாரம் தொடர்பாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள் மற்றும் தேசிய தலைநகரில் ‘இந்தியா’ (INDIA) கூட்டணி நடத்த திட்டமிட்டுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டும், காங்கிரஸ் கட்சி தனது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் திங்கள்கிழமை டெல்லியில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, சி.ஜே.பி (CJP) தலைமையிலான போராட்டத்தின் போது மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது டெல்லி காவல்துறையினரும் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் வன்முறையைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அக்டோபர் 12 (திங்கள்கிழமை) அன்று ‘இந்தியா’ கூட்டணி மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடும் என்று அறிவித்திருந்தார்.
அதேவேளை, டெல்லியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்கின்றன. பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்புகள் களமிறக்கப்பட்டுள்ளன.




