துருக்கி முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – 26 பேர் கைது
துருக்கியில் விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆறு LGBTQ+ அமைப்புகளின் அலுவலகங்களிலும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குடும்ப விழுமியங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர். இதற்கமைய 12 மாகாணங்களில் சுமார் 38 சந்தேகநபர்களுக்கு எதிராக சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போது போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், கடத்தல் மதுபானம் […]













