ஐரோப்பா செய்தி

எதிர்ப்பு வெளியிட்ட தொழிற் கட்சி எம்.பி. கேத்தரின் பிரதமரின் உரைக்கு பின்னர் ஆதரவு

பிரதமர் Starmer ஆற்றிய முக்கிய உரைக்கு பின்னர், தொழிற் கட்சி எம்.பி. கேத்தரின் அட்கின்சன் (Catherine Atkinson) அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

“மக்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தீவிரத்தை பிரதமர் புரிந்துகொண்டிருப்பது அவரது உரையில் தெளிவாக தெரிந்தது” என அவர் கூறியுள்ளார்

உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்காளர்கள் தெரிவித்த அதிருப்தியை ஸ்டார்மர் கவனமாகக் கேட்டுள்ளதாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் “ஒரு புதிய நம்பிக்கையை” வழங்கியுள்ளதாகவும் அட்கின்சன் தெரிவித்தார்.

மேலும், வலிமையான மற்றும் நியாயமான பிரித்தானியாவை உருவாக்கும் பிரதமரின் முயற்சிக்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் கூறினார்.

தொழிலாளர் கட்சிக்குள் சிலர் தலைமை மாற்றம் குறித்து பேசிவரும் நிலையில், பெரும்பாலான எம்.பி.க்கள் தற்போதைய பிரதமருடன் இணைந்து செயல்பட விரும்புகிறார்கள் என்றும் , தொழிற் கட்சி எம்.பி. கேத்தரின் அட்கின்சன் (Catherine Atkinson) கூறியுள்ளார்.

முன்னதாக இந்த கட்சிக்குள் தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வந்த நிலையில், Catherine West பிரதமர் Starmerக்கு எதிராக தலைமைப் போட்டியைத் தொடங்கத் தயார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!