பொழுதுபோக்கு

ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இதற்காக மார்ச் மாத இறுதிக்குள் படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஷங்கரின் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘இந்தியன் 2’ பாகத்திற்கான அனைத்துக் கட்டப் படப்பிடிப்பு வேலைகளும் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், படத்தில் வரக்கூடிய CG மற்றும் VFX காட்சிகளுக்கான பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இப்படத்திற்காக ஏற்கெனவே 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய காட்சிகளுக்கான கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Indian 2 – Kamal Haasan and Shankar's project is not releasing in April  2024; Here's why

‘இந்தியன்’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிக CG மற்றும் VFX காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக மார்ச் இறுதிக்குள்ளாக படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் நிறைவு செய்ய இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content