வட அமெரிக்கா

குடிபோதையில் நிர்வாணமாக புளோரிடா விமான நிலையத்திற்குள் வலம் வந்த ஆசாமி..!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் வந்த ஒரு நபர், நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் நுழைந்தார். அந்த நபர் அங்குமிங்கும் செல்வதைப் பார்த்த சக பயணிகள் முகம் சுளித்ததுடன், அவரை விட்டு விலகிச் சென்றனர்

விமான நிலைய முதலாவது முனையத்தின் செக்-இன் பாதை வழியாக சர்வ சாதாரணமாக நடந்து சென்ற அவர், பின்னர் விமான நிலைய டி.எஸ்.ஏ. பாதுகாப்பு பாதை நோக்கி நடந்து சென்றார். பாதுகாப்பு அதிகாரிகளை கடந்து சென்று, தடை செய்யப்பட்ட அறைக்குள் நுழைய முயன்றுள்ளார். பின்னர் பொலிஸார் அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்து,துணியால் போர்த்தி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில் அந்த நபர் மார்ட்டின் எவ்டிமோவ் (36) என்பதும், குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. ஆனால் எதற்காக இப்படி நடந்துகொண்டார் என்பது தெரியவியவில்லை. அந்த நபர் நிர்வாணமாக வலம் வரும் வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

See also  அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - கமலா ஹாரிஸ் முன்னிலையா? கடும் கோபத்தில் டிரம்ப்

Bizarre moment drunk man, 36, strips naked and strolls through Florida airport terminal while waving at shocked travelers | Daily Mail Online

கைது செய்யப்பட்ட மார்ட்டின் எவ்டிமோவ் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.அவர் தன்னை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், மது அல்லது பிற போதைப் பொருட்களை உட்கொள்ள கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அவ்வப்போது போதைமருந்து பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேசமயம் அவர் விமான நிலையத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடை அணிந்து சென்றாலும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று நீதிபதி தெரிவித்தார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content