உலகம் செய்தி

அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்திய சவூதியின் உயர்மட்ட தூதுக்குழு

சவூதி அரேபியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் வாலித் அல்-குரைஜி (Walid al-Khuraiji) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் (Ali Khamenei) இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சவூதி அரேபியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் வாலித் அல்-குரைஜி (Walid al-Khuraiji) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் (Ali Khamenei) இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானிய ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்,

“தங்கள் நாட்டின் மீதும் அண்டை வளைகுடா நாடுகள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்வதற்கு ஒரு எல்லை உண்டு” என்று ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், தனது உத்திகளை ஈரான் “மறுபரிசீலனை” செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் வரலாற்று ரீதியாகப் பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்த போதிலும், சீனாவின் மத்தியஸ்தம் மூலம் இரு நாடுகளும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குள் சுமுகமான உறவை ஏற்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, பாகிஸ்தான் பிரதமர், அந்நாட்டு ராணுவத் தளபதி உள்ளிட்டவர்களும் இன்று அஞ்சலி செலுத்தினர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி