கலாசார மரபுத் தளங்களை பாதுகாக்குமாறு பிரதி அமைச்சர் பணிப்பு
தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளங்களை உரிய முறையில் பாதுகாக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்தியுள்ளார்.
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு பிரதி அமைச்சர் இன்று (04) நேரில் சென்று கள விஜயம் மேற்கொண்டார்.
இயற்கை பேரிடர்களால் சேதமடைந்திருந்த இத்தலம், கடந்த ஆட்சிக் காலங்களில் சில சமூக விரோதிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளால் மேலும் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளத்தை உரிய முறையில் பாதுகாக்கவும், இத்தளத்திற்குச் செல்லும் வீதியைச் செப்பனிடவும் தேவையான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கள ஆய்வின்போது, சேருவிலை பிரதேச சபை உறுப்பினர் செல்வராசா சச்சிதேவன், வைத்திய கலாநிதி சதீஸ்குமார், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





