அலி கமேனியின் செல்வாக்கு என்றும் நினைவுகூரப்படும் – பாகிஸ்தான் பிரதமர் உருக்கம்
அலி கமேனியின் செல்வாக்கு தலைமுறைகளைக் கடந்து நினைவுகூரப்படும் – என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின் பிரதமர் , தெஹ்ரானில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ஷெரீப்,
“அலி கமேனியின் ஞானம், தலைமைத்துவம் மற்றும் ஈரான் மீதும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மீதும் அவர் செலுத்திய செல்வாக்கு தலைமுறைகளைக் கடந்து நினைவுகூரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஷெரீப்புடன், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, தேசிய நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவும் இந்த நிகழ்வில் உடனிருந்தது.





