ஜென் Z தலைமுறையினருக்காக புதிய வீட்டுத்திட்டம் – பரன்ஹாம் பரிசீலனை
பிரித்தானியாவில் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆண்டி பர்ன்ஹாம், தலைமுறை தலைமுறையாக நிலவும் செல்வ இடைவெளியைக் குறைக்கவும், இளைஞர்களுக்கு, குறிப்பாக ஜென் Z தலைமுறையினருக்கு ஆதரவளிக்கவும் புதிய கொள்கைத் தொகுப்பைப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய வீட்டு கட்டுவதற்கான அல்லது சொந்தமாக வீடொன்றை கொள்வனவு செய்ய உதவும் நோக்கில் இளைஞர்களின் முழுநேரப் பணியின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பில் பரீசிலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு £3.5 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில், வாடகைக்கு வாங்கி சொந்தமாக்கும் திட்டங்களுக்கான உதவியும், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் பயணத்தை வழங்கும் போக்குவரத்து திட்டத்தை அமுல்படுத்துவதும் உள்ளடங்கும்.
வீடு வாங்குவதில் சிரமப்படும் ஜென் Z தலைமுறையினரின் சிக்கல்களை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டு அவர் இந்த திட்டங்களை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





