மோதர பகுதியில் இரு கைத் துப்பாக்கிகள் மீட்பு
கொழும்பு – மோதர பகுதியில் இருந்து இரண்டு கைத் துப்பாக்கிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மோதர நிபுணா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சகோதரரான சதுரையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் இந்த துப்பாகிகள் பற்றி தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர் சமீபத்தில் துபாயிலிருந்து நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது 90 நாட்கள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





