தமிழக அரசியலில் குதிரை பேரம்: ஆளுநரிடம் முறைப்பாடு
தமிழக அரசியலில் அரங்கேறும் குதிரை பேரத்தை தடுக்கு மாறுகோரி ஆளுநர் அர்லேகரிடம் , அதிமுகவினர் இன்று முறைப்பாட்டு மனு கையளித்தனர்.
ஆளுநரை சந்தித்து மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ,
“குதிரை பேரம் தொடர்பாக ஏற்கெனவே ஆளுநர் மற்றும் சட்டப்பேரவை தலைவரிடத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநரிடம் மீண்டும் ஒரு மனுவை கொடுத்துள்ளோம்.” என்றார்.
ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
குதிரை பேரத்தின் மூலம் 6 அதிமுக எம்எல்ஏக்களை குதிரை வேகத்திலே இந்த அரசு விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பதை கண்டித்தும், இந்த நடவடிக்கையை நிறுத்த வலியுறுத்தியும் ஆளுநரிடத்தில் மனு அளித்துள்ளோம்” என அவர் மேலும் கூறினார்.
அதிகமு எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் தவெகவுடன் சங்கமித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





