இலங்கை

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தாங்க முடியாத வெப்பம்

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி,  இன்று (09) மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்  சில இடங்களில்,  வெப்பநிலையானது  மனித உடல் உணரும் வெப்பநிலையின் அளவை விட உச்சம் தொட வாய்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்