இலங்கை செய்தி

நீர்கொழும்பிலிருந்து பெண் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம் வெடித்ததையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 வெளிநாட்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது.

மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவினால், அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை