ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது : 90 இலக்குகளை அழித்த பிறகு ட்ரம்ப் கருத்து
ஈரான் உண்மையில் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு அமெரிக்கா செல்ல தயாரான அவர், ஏர் ஃபோர்ஸ் வன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அவர்கள் சற்று முன்பு அழைத்தார்கள். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய மிகவும் விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
நேற்று இரவு ஈரானில் 90-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள் குறித்துக் கேட்டபோது, ”இது உண்மையில் பழிவாங்கும் நடவடிக்கை” என்றும் அவர் விவரித்துள்ளார்.




