வளைகுடாவிலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது ஈரான் தாக்குதல்
குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணை அமைப்பு, கத்தாரில் உள்ள செயற்கைக்கோள் அமைப்பு (Satellite antenna early warning system) மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் ஆகியவையே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த 48 மணிநேரத்துக்குள் ஈரானில் 170 ராணுவ இலக்குகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.




