இலங்கை

சட்டவிரோத தங்கக் கடத்தல் – வசமாக சிக்கிய தொழிலதிபர் : 10 இலட்சம் அபராதம்

சுங்கத்துறையிடம் அறிவிக்காமல் சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கத்தை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 11.8 மில்லியன் பெறுமதியான தகங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

மாத்தளையைச் சேர்ந்த 53 வயது தொழிலதிபர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயில் இருந்து நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளார்.

விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அந்தப் பயணியை இடைமறித்து சோதனைகளை மேற்கொண்டனர்.

அவரது உடமைகளை சோதனையிட்டபோது, ​​   மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 தங்க நெக்லஸ்கள், 10 தங்க வளையல்கள் மற்றும் இரண்டு தங்க பிஸ்கட்டுகள் என மொத்தம் 271.480 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபர் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (09) நைகந்தாவில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையைத் தொடர்ந்து, தங்கப் பொதி சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பயணிக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்