இலங்கை செய்தி

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு – வெளியானது வர்த்தமானி

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு - வெளியானது வர்த்தமானி

கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வர்த்தமானி மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய போகம்பறை சிறைச்சாலை, முழுவதையும் உள்ளடக்கிய அதிகார வரம்புடன், ஒரு சிறைச்சாலையாக நிறுவப்படுவதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கவும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

138 ஆண்டுகளாகச் செயற்பட்ட கண்டியில் உள்ள போகம்பறை சிறைச்சாலை, 2014ஆம் ஆண்டு மூடப்பட்டது.

அங்கிருந்த கைதிகள் பல்லேகலயில் உள்ள தும்பற சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

காலி- மகாமோதரவில் புதிய சிறைச்சாலையை நிறுவும் வர்த்தமானி நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில் நேற்று போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் ஆரம்பிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை