நீங்க இத தானே எதிர்பார்த்துட்டு இருந்தீங்க? இதோ புது அப்டேட் வந்தாச்சி…
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தனது 50ஆவது படத்துக்காக செய்திருக்கும் ப்ளான் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. தனுஷ் கடைசியாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றால் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் தனுஷ். ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. […]













