காற்றின் வேகத்தினால் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்! இருவர் படுகாயம்
திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மற்றும் மனைவி காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து-அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகத்தினால் மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் வேகமாக வந்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













