அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் ஈரான், அமெரிக்காவுக்கிடையில் தொடரும் இழுபறி
வளைகுடா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்தோ, அதை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்தோ பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை பிராந்தியத்தில் கப்பல்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்திய நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கைக்கு இந்த கருத்துக்கள் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
முக்கிய கப்பல் பாதையான ஹோர் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துக்கொண்ட ஈரானிய வாக்குறுதியை அது நிறைவேற்றத் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அதே வேளையில், ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை விலக்குவது மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது உள்ளிட்ட தனது கடமைகளிலிருந்து அமெரிக்கா பின்வாங்கிவிட்டதாக தெஹ்ரான் கூறுகிறது.
“மத்தியஸ்தர்கள் மூலம் விவாதிக்கப்படும் பிரச்சினைகளில் ஒன்று, அமெரிக்கா மீண்டும் இடைக்கால ஒப்பந்தத்திற்குத் திரும்புவது மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை வரையறுப்பதாகும்.
இந்த விவகாரத்தில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை,” என்று ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து வாஷிங்டனிடமிருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.




