செய்தி

பிரேரணையைக் கிழித்தெறிந்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

யாழ்.மாநகரசபையின் Jaffna Municipal Council இன்றைய அமர்வின்போது ஈ.பி.டி.பி. E.P.D.P. உறுப்பினர்கள் பிரேரணையைக் கிழித்தெறிந்து சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அப்பிள் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை தொடர்ந்தே ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் இவ்வாறு செயல்பட்டனர். இன்றைய சபை அமர்வின் போது இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள், முறையான மாற்றுத் திட்டம் அல்லது பொறிமுறை இன்றி இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டுவரக் கூடாது என வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் […]

இலங்கை செய்தி

யாழ். மாநகரசபைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

யாழ். நகர அப்பிள் apple கடை வியாபாரிகள் இன்று மாநகர சபை நுழைவாயிலுக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மத்திய பஸ் நிலையச் சூழலில் அமைந்துள்ள அப்பிள் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நகரில் அமைந்துள்ள அப்பிள் கடைகளின் செயற்பாடுகள் தொடர்பாக உறுப்பினர் ப.தர்சானந்த் சபையில் முன்வைத்த பிரேரணையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட […]

இலங்கை செய்தி

கறுப்பு கொடி பறக்கவிடுவது தவறு கிடையாது: யாழ்.பல்கலை மாணவர்களுக்காக சுரேஷ் களத்தில்!

  • February 13, 2026
  • 0 Comments

“யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என்ற பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது.” இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ்  பிரேமச்சந்திரன் Suresh  Premachandran தெரிவித்துள்ளார். போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத்தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அவர் வலியுறுத்தியுள்ளார். “இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் […]

விளையாட்டு

சிம்பாப்வேயிடம் மண்டியிட்டது ஆஸ்திரேலியா!

  • February 13, 2026
  • 0 Comments

கிரிக்கெட் உலகில் பலம்பொருந்திய அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவை Australia சிம்பாப்வே Zimbabwe அணி தோற்கடித்துள்ளது. T20 உலக்கிண்ண தொடரில் 19 ஆவது லீக் ஆட்டம் கொழும்பு ஆர். பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. Brian Bennett ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களைப் […]

இலங்கை

தற்கொலை மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!!

  • February 13, 2026
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலை களமொன்றிலும் , உளநலப் பிரிவிலும் இடம்பெற்ற மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் உள்ள உள நலப்பிரிவில் கிண்ணியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட விதத்தில் பல்வகையான கருத்துக்கள் பேசப்பட்டு வந்தன. ஆனாலும் உளநல பிரிவில் நோயாளர்களை அனுமதிக்கும் போது அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடமையாற்றுகின்றவர்கள் […]

பொழுதுபோக்கு

உயிருள்ளவரை உஷா முதல் காதலர் தினம்வரை…!

  • February 13, 2026
  • 0 Comments

உலகெங்கிலும் காதலர் தினம் நாளை (14) கொண்டாடப்படுகின்றது. காதலர் தினத்தை இலக்கு வைத்து சில காதல் படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில காதல் படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன. நடிகர் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாக நடித்த “உயிருள்ளவரை உஷா” திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீரிலீஸ் ஆகியது. 1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு, டி. ராஜேந்தரே இசையமைத்திருந்தார். அதுபோல கௌதம் மேனன் இயக்கிய மாதவனின் மின்னலே, […]

உலகம்

தென் கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு – 02 பேர் உயிரிழப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கருப்பினத்தவர்களுக்கான கல்லூரியான தென் கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் விடுதியில் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இருவர் உயரிழந்த நிலையில் மற்றொரு நபர் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவத்தை தொடர்ந்து குறித்த வளாகம் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் முகப்புத்தக பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஹுஜின் சூட்ஸ்  (Hugine Suites) மாணவர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்தாரிகள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் […]

ஐரோப்பா

இங்கிலாந்து முழுவதும் கொட்டி தீர்க்கும் பனி : மக்களின் கவனத்திற்கு!

  • February 13, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவிற்கான இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வானிலை மையத்தின் அறிவிப்பிற்கு அமைய இன்று பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்றும், இரவு முழுவதும் வெப்பநிலை குறைந்து குளிராக இருக்கும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. குறித்த வானிலை மாற்றமானது நாளை தினத்திற்கும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் அதீத பனிப்பொழிவால் ஏற்படும் ஆபத்தான நிலைமைகள் குறித்தும் மக்கள்  கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்தியா தமிழ்நாடு

ஆளுநராகிறார் ஓ.பி.எஸ்? புது வியூகம் வகுக்கிறது பா.ஜ.க.!

  • February 13, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், O. Panneerselvam (OPS) விரைவில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதில் பா.ஜ.க. BJP தீவிரம் காட்டிவருகின்றது. பல பகுதிகளில் வெற்றிநடை போட்டாலும் தமிழகத்தில் கால் பதிப்பதென்பது பா.ஜ.கவுக்கு தொடர்ந்து எட்டாக் கனியாகவே இருந்துவருகின்றது. எனவே, அ.தி.மு.க. தலைவர்களை ஒன்றிணைத்தால் மட்டுமே தி.மு.கவை வெல்ல முடியும் என பா.ஜ.க. […]

ஐரோப்பா

சமூக ஊடகங்களை அணுகுவதற்கு பெற்றோரின் ஒப்புதல் தேவை -போர்த்துகலில் புதிய சட்டம்!

  • February 13, 2026
  • 0 Comments

13 முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதற்கு  பெற்றோரின் ஒப்புதல் தேவை என்ற சட்டமூலம் போர்த்துகளில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 148-69 வாக்குகளால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரம் 13 பேர் வாக்களிக்கவில்லை.  ஐரோப்பாவில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் முதல் உறுதியான சட்டமன்ற நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியின் (PSD)  சட்டத்தின் வரைவு ஆசிரியர்கள், சைபர்புல்லிங், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் வேட்டையாடும் நபர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த முறை […]