லூவ்ரே அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி : ஒரு தசாப்தத்தில் 10 மில்லியன் கொள்ளை!
பிரான்ஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 09 பேர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 மில்லியன் யூரோ வரையில் மோசடி செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், வழக்கு விசாரணைகளுக்கு அமைய கடந்த செவ்வாய்க்கிழமை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு லூவ்ரே ஊழியர்கள், பல சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் […]













