ஐரோப்பா

சமூக ஊடகங்களை அணுகுவதற்கு பெற்றோரின் ஒப்புதல் தேவை -போர்த்துகலில் புதிய சட்டம்!

13 முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதற்கு  பெற்றோரின் ஒப்புதல் தேவை என்ற சட்டமூலம் போர்த்துகளில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

148-69 வாக்குகளால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரம் 13 பேர் வாக்களிக்கவில்லை.  ஐரோப்பாவில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் முதல் உறுதியான சட்டமன்ற நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியின் (PSD)  சட்டத்தின் வரைவு ஆசிரியர்கள், சைபர்புல்லிங், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் வேட்டையாடும் நபர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த முறை தேவை எனக் கூறுகின்றனர்.

டிஜிட்டல் மொபைல் கீ (DMK) என்ற அமைப்பு பெற்றோர்களின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கும். ஆன்லைன் கொடுமைப்படுத்துதல் மற்றும் மனநல அபாயங்கள் குறித்த வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த சட்டமூலம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்