உலகம்

நான் மீண்டும் ஜனாதிபதியானால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் : டொனால்ட் ட்ரம்ப்!

  • December 17, 2023
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குடியேற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதால், தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என தெரிவித்துள்ளார். 2024 குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணியில் இருப்பவர் நியூ ஹாம்ப்ஷயரில் நடந்த பேரணியில், அவர் மீண்டும் பதவியேற்றால் சில அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புவார்கள் என்று கூறினார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் வெற்றி பெற்றவுடன், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும், […]

ஆசியா

தைவானில் இளம்பெண்னின் சிறுநீரகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ள 300 கற்கள்..!

  • December 17, 2023
  • 0 Comments

தைவானில் யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தைவானில் சியோ பு என்ற 20 வயது இளம்பெண்ணுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து அவரது சிறுநீரகத்தில் இருந்து சுமார் 300 கற்கள் அகற்றப்பட்டுள்ளன. சியோ பு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்துள்ளார்.குறித்த பெண் தாகம் எடுத்தால் கூட தண்ணீருக்கு பதிலாக பபிள் டீ (Bubble Tea) எனப்படும் டீ வகையை மட்டுமே அதிகமாக பருகி வந்துள்ளார். அதனால் கழிவுகளை […]

பொழுதுபோக்கு

கட்டுப்படுத்த முடியாத வெற்றி: அனிமல் 16வது நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

  • December 17, 2023
  • 0 Comments

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. முதல் நாளில் ரூ. 116 கோடி வசூலித்தது. […]

இலங்கை

களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்ட பீடங்களின் கற்கைகள் மீள ஆரம்பம்!

களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கைகள் நாளை (18) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கற்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக உபவேந்தர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இரவு இடைவேளை அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து களனி பல்கலைக்கழகம் கடந்த 5 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக […]

இலங்கை

மட்டக்களப்பில் தனியாருக்கு சொந்தமான பஸ்வண்டியில் மோதி சிறுவன் உயிரிழப்பு

  • December 17, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதானவீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த விசேட தேவையுடைய அமீர்தீன் யாசிர் அறபாத் (16) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். தாய், யாசகம் பெறுவதற்காக கல்முனை சென்று ஊர் வரும்போது, தாயை எதிர்பார்த்து பஸ்தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன் , தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது பிரதான வீதியால் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு […]

இலங்கை

இலங்கை நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வெளியிட்ட அறிவிப்பு!

  • December 17, 2023
  • 0 Comments

நிதியமைச்சின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உத்தரவாதங்களை வழங்கும் நிறுவனம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். நெருக்கடி நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்தில் 50%க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டை அரசு முதன்மையாகக் கருதுகிறது என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் […]

உலகம்

லிபியாவில் கப்பல் விபத்து: அறுபத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

லிபிய கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 61 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. லிபியாவின் Zuwara நகரில் இருந்து 86 பேருடன் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியா, காம்பியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். உயிர் பிழைத்த 25 பேர் லிபியாவில் உள்ள […]

பொழுதுபோக்கு

ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முதன்முறையாக உங்களுக்காக…

  • December 17, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவின் சொத்து மதிப்பு பற்றி செய்தி வெளியாகி உள்ளது. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஜோதிகாவில் சினிமாவில் அடையாளம் கொடுத்தது தமிழ் படங்கள் தான். தமிழில் இவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ஜோதிகாவும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. இதற்கு அடுத்தபடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதன்முறையாக நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா. இப்படத்தில் […]

இலங்கை

முல்லைத்தீவில் தேசிய மாகாண போட்டிகளில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் கௌரவிப்பு!

  • December 17, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக பங்குகொண்டு தேசிய மாகாண மட்டத்திலான போட்டிகளில் சாதனைகள் புரிந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் வீரர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அவர்களை பயிற்றுவித்த பயிற்றுனருக்கான கெளரவம் அளிக்கும் நிகழ்வுகள் மிகவும் சிறப்புற நடைபெற்றன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வானது நேற்று (16.12) இடம்பெற்றுள்ளது. இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் சி. ஜெயகாந்த், சிறப்பு விருந்தினராக பிரதேச செயலக கணக்காளர் க. […]

இலங்கை

இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த யுனிசெஃப் திட்டம்

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கணக்கெடுப்பு மற்றும் ஆராய்ச்சியின் முடிவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். சுகாதார செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஸ்கூக் இதனை எடுத்துரைத்துள்ளார். இத்திட்டம் நிறைவடைந்ததையடுத்து, சுகாதாரத்துறை செயலரிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. வரவிருக்கும் முயற்சிகளை திறம்பட செயல்படுத்த செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும் ஸ்கூக் அடிக்கோடிட்டுக் காட்டினார். கூட்டத்தில் பெண்கள் மற்றும் […]