பொழுதுபோக்கு

கட்டுப்படுத்த முடியாத வெற்றி: அனிமல் 16வது நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல்.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது.

முதல் நாளில் ரூ. 116 கோடி வசூலித்தது. திருவிழா அல்லாத நாள்களில் வெளியாகி இவ்வளவு வசூலித்த படங்களில் இதுதான் முதன்முறை என படக்குழு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. படம் 2வது நாளில் ரூ.236 கோடியும் 3வது நாளில் ரூ. 356 கோடியும் வசூலித்துள்ளது. இதனை பாக்ஸ்-ஆபிஸ் சுனாமி என படக்குழு வர்ணித்தது.

நடிகர் அல்லு அர்ஜுன் படத்தினை கிளாசிக் என்று புகழ்ந்துள்ளார். ரசிகர்களின் பேராதரவில் சென்னையில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டன.

10வது நாளில் ரூ.717.46 கோடி வசூலித்தது. தற்போது. 16வது நாளில் ரூ. 817.36 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத சினிமாட்டிக் வெற்றி எனப் படக்குழு இதனை விவரித்துள்ளது.

முதல் ஒரு வாரத்தில் ஜெட் வேகத்தில் வசூலித்த அனிமல் படத்தின் வசூல் 2வது வாரத்தில் குறைந்துள்ளது. ஆயிரம் கோடியை எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்