வட அமெரிக்கா

7.6 சென்டிமீட்டர் மழைக்கே வெள்ளத்தில் மூழ்கிய கலிபோர்னியா!

  • December 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 7.6 சென்டிமீட்டருக்கும் அதிகமாக பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையோர பகுதியில் பசிபிக் பெருங்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடற்கரையோர நகரங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் 7.6 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்ததால் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு […]

ஆசியா

சீனா, வடகொரியாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாதுகாப்பிற்காக மிகப் பெரிய தொகையை ஒதுக்கிய ஜப்பான்!

  • December 22, 2023
  • 0 Comments

சீனா மற்றும் வட கொரியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டை ஜப்பான் வெள்ளிக்கிழமை அங்கீகரித்துள்ளது. இதன்படி அடுத்த நிதியாண்டுக்கு  $56 பில்லியன் பாதுகாப்பிற்காக ஜப்பான் ஒதுக்கியுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான 7.95 டிரில்லியன் யென் ($56 பில்லியன்) வரைவு பட்ஜெட், அடுத்த சில ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவினங்களை உயர்த்தும் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் உறுதிமொழிக்கு ஏற்ப அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. சீனாவுடனான வெளிப்படையான பதற்றங்கள், 2027 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேட்டோ தரத்திற்கு […]

உலகம்

ஜமால் கஷோகியின் மனைவிக்கு காலவரையற்ற புகலிட அந்தஸ்து வழங்கப்பட்டது!

  • December 22, 2023
  • 0 Comments

இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மனைவிக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது. ஜமால் கஷோகி அக்டோபர் 2018 இல் இறந்தார், அதன் பிறகு ஹனான் எலத்ர் தனது பாதுகாப்பிற்கு பயந்து ஆகஸ்ட் 2020 இல் அமெரிக்காவிடம் புகலிடம் கோரினார். இந்நிலையில் ஜமால் கஷோக்கியின் மனைவிக்கு  அமெரிக்காவில் காலவரையற்ற புகலிட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஹனன் எலத்ர், “நாங்கள் வெற்றி பெற்றோம், ஆம், அவர்கள் ஜமாலின் உயிரைப் பறித்தனர், அவர்கள் என் வாழ்க்கையை […]

உலகம்

செக் குடியரசின் தலைநகர் பிறாகில் துப்பாக்கிச்சூடு : வெளிநாட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

  • December 22, 2023
  • 0 Comments

செக் தலைநகர் பிறாகில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் இன்று (22.12) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். இதில் வெளிநாட்டினரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், காயமடைந்தவர்களில் இரு சவுதி அரேபிய பிரஜைகளும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகிறது. துப்பாக்கிதாரியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு […]

பொழுதுபோக்கு

முதல் நாள் வசூலில் படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கானின் துன்கி!

  • December 22, 2023
  • 0 Comments

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துன்கி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி மட்டுமே வசூல் ஈட்டியுள்ளது. இது ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டில் இதற்கு முன்பு வெளியான ‘ஜவான்’, ‘பதான்’ படங்களின் முதல் நாள் வசூலை விட குறைவாகும். ஷாருக்கான் நடிப்பில் ‘துன்கி’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் முதல் நாளில் ரூ.30 கோடி மட்டுமே கல்லாக்கட்டியுள்ளது. இது இந்த […]

இலங்கை

புதிய அரசியல் யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு : தமிழ் எம்பிகளிடம் ஜனாதிபதி உறுதி!

  • December 22, 2023
  • 0 Comments

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் பின்னரே புதிய அரசியல் யாப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று கடந்த 21.12.2023 அன்று ஜனாதிபதியின் தலைமையில் அவரது செயலகத்தில் வடக்கு-கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு, […]

பொழுதுபோக்கு

ரவி கிருஷ்ணாவை செருப்பால் அடித்த சோனியா அகர்வால்.. பல வருட ரகசியம் லீக்

  • December 22, 2023
  • 0 Comments

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ன் நடிப்பில் கடந்த 2004 -ம் ஆண்டு வெளியான7ஜி ரெயின்போ காலனி படத்திற்கு தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை போலவே, இந்த படத்திலும் ஹீரோவாக ரவிகிருஷ்ணா நடிப்பதாக சொல்லப்படுகிறது. 7ஜி ரெயின்போ காலனி படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து ரவி கிருஷ்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், பஸ் பிரேக் பிடிக்க சோனியா அகர்வாலின் மேல் ரவி […]

இலங்கை

இலங்கையில் தரமற்ற தடுப்பூசி கொள்வனவு : முன்னாள் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!

  • December 22, 2023
  • 0 Comments

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் தாம் முதல் முறைப்பாட்டாளர் எனவும் எனவே தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது முறைப்பாடு தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் தாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். “நான்தான் புகார்தாரர். புகார் தொடர்பாக பதில் அளிக்க […]

ஐரோப்பா

உக்ரைனில் இரண்டு நிலக்கரிச் சுரங்கங்களில் ரஷ்யா குண்டுவீசித் தாக்குதல் : மூவர் உயிரிழப்பு

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள டோரெட்ஸ்கில் உள்ள இரண்டு நிலக்கரிச் சுரங்கங்களில் ரஷ்யா குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் க்ளைமென்கோ தெரிவித்தார். தாக்குதலின் போது நிலத்தடியில் இருந்த சுமார் 32 சுரங்கத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக மேற்பரப்பில் கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் கூறினார். இந்த தாக்குதலில் நிர்வாக கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களும் சேதமடைந்தன.

இலங்கை

இலங்கையிலும் கொவிட் தொற்றின் தாக்கம்! வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

  • December 22, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இலங்கையிலும் கொவிட் தொற்றின் தாக்கம் இருப்பதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில்  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பேராசிரியர் டாக்டர் சந்திம ஜீவந்தர, “ஜேஎன் 1” கொரோனா கிளையினங்கள் நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்.