இலங்கை

வவுனியா பாவற்குளத்தில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு!

  • December 22, 2023
  • 0 Comments

வவுனியா, பாவற்குளம் நீர்த் தேக்கத்திற்கு இளைஞருடன் சென்ற இளம் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் இன்று (22.12) தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவருடன் இளம் யுவதி அங்கு சென்றுள்ளார். குறித்த நீர்த்தேக்கம் பகுதியில் நின்ற போது யுவதி நீரில் வீழ்ந்துள்ளார். சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு யுவதியை மீட்டு, பாவற்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு […]

ஆசியா

பாக். அரசு ரகசியங்களைக் கசிய விட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன்!

  • December 22, 2023
  • 0 Comments

அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு ரகசியங்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அரசு ரகசியங்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே […]

இலங்கை

இலங்கை இந்திய ஒப்பந்தம் ;ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

  • December 22, 2023
  • 0 Comments

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,ஜனாதிபதி மற்றும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் […]

பொழுதுபோக்கு

பிரபல ஹாலிவூட் நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு ; 13 ஆண்டுகள் கழித்து வெடித்த குண்டு

  • December 22, 2023
  • 0 Comments

ஹாலிவூட்டில் பிரபல நடிகராக இருப்பவர் வின் டீசல் (56). பல ஆக்சன் படங்களில் நடித்த இவருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்த தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ், எக்ஸ் எக்ஸ் எக்ஸ், ஃபாஸ்ட் ஃபைவ், அவெஞ்சர்ஸ் ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஃஹாலிவூட்டில்ஆண்டு ஃபாஸ்ட் ஃபை திரைப்படத்திற்கான செட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த அஸ்டா ஜானஸன் என்பவர் நடிகர்  வின் டீசல் தன்னைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள முயற்சித்ததாகக் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் குத்திக்கொலை: தாய் மீது குற்றச்சாட்டு

  • December 22, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் 4 வயது மகன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 4 வயது மகன் கோபி டூலி-மச்சாரியா கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 41 வயதான தாய் கெசியா மச்சாரியா தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளார். புதன்கிழமை இரவு 10.50 மணியளவில் ஹாக்னி மாண்டேக் சாலையில் உள்ள முகவரிக்கு அழைக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணையை தொடங்கினர். அப்போது சிறுவன் கோபி கத்தி குத்து […]

இலங்கை

இலங்கையில் மாயமான சீன பிரஜை!

  • December 22, 2023
  • 0 Comments

பயாகல கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த சீன பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர் 54 வயதான Zhang Xiaolong என்ற சீன நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன சீன பிரஜை, பயாகல வடக்கு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போதே அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமற்போன நபரை பிரதேசவாசிகள் கடற்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் […]

இலங்கை

பிரித்தானியா செல்ல முயன்ற பிரஜை ஒருவர் கட்டுநாயக்காவில் கைது!

  • December 22, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து பிரித்தானியா செல்ல முற்பட்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து  ரிவோல்வர், 10 ரவைகள், ரம்போ ரக கத்தி மற்றும் 05 உயிருள்ள தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வான்வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்வது அவசியமானால், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும். இன்று பிற்பகல் 12.55க்கு இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் […]

இலங்கை

முல்லைத்தீவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 170 பேருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

  • December 22, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட 170 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் பெரண்டினா நிறுவனத்தின் மனிதாபிமான உதவி செயல் திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 63 குடும்பங்களுக்கும் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 06 குடும்பங்களுக்கும் கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 61 குடும்பங்களுக்கும் கருவேலகண்டல் கிராம […]

இலங்கை

வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை -ஐயாத்துரை!

  • December 22, 2023
  • 0 Comments

தற்போது தேர்தல் காலம் இல்லாதபடியினால் வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (22.12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் கட்சிகள் சென்று […]

இலங்கை

தேர்தலை கொண்டே ரணில் விக்கிரமசிங்க தமிழ் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் – கஜேந்திர குமார் பொன்னம்பலம்!

  • December 22, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களையும் ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கியாக மட்டும் கொண்டுசெல்லும் இந்த பாதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்காகவே எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜனாதிபதியை பாராட்டவேண்டும். ஏனென்றால் சரியான தரப்புகள் யார்,ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்?,ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு […]